search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆண்ட்ராய்டு ஒன்"

    மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் இன்-ஸ்கிரீன் செல்ஃபி கேமராவுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



    மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. மோட்டோரோலா ஒன் விஷன் என அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 21:9 சினிமா விஷன் எல்.சி.டி. டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.

    எக்சைனோஸ் 9609 பிராசஸர் கொண்டிருக்கும் புதிய மோட்டோ ஸ்மார்ட்போனில் 25 எம்.பி. இன்-ஸ்கிரீன் செல்ஃபி கேமரா வழங்கப்ட்டுள்ளது. இத்துடன் 1.8µm குவாட் பிக்சல் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருப்பதால் குறைந்த வெளிச்சத்திலும் சிறப்பான செல்ஃபிக்களை எடுக்க முடியும்.



    புகைப்படம் எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, நைட் விஷன் மோட், OIS மற்றும் குவாட் பிக்சல் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் நான்கு பிக்சல்களை ஒன்றிணைத்து தெளிவான 12 எம்.பி. தரத்தில் புகைப்படங்களை வழங்குகிறது. இத்துடன் 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    ஸ்மார்ட்போனின் பின்புறம் 4D கார்னிங் கொரில்லா கிளாஸ் பேக் மற்றும் கிரேடியன்ட் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் கைரேகை சென்சார் பேக் பேனலில் வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் கொண்டிருக்கும் மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போன் 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இதனை வேகமாக சார்ஜ் செய்ய 15 வாட் டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.



    மோட்டோரோலா ஒன் விஷன் சிறப்பம்சங்கள்:

    - 6.3 இன்ச் 1080x2520 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி.
    - 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் 9609 பிராசஸர்
    - 4 ஜி.பி. ரேம்
    - 128 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஹைப்ரிட் டூல் சிம் ஸ்லாட்
    - ஆண்ட்ராய்டு 9.0 பை
    - 48 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.7, OIS
    - 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2
    - 25 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
    - கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், டூயல் மைக்ரோபோன்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
    - 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 15 வாட் டர்போ பவர் ஃபாஸ்ட் சார்ஜிங்

    மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போன் சஃபையர் புளு, பிரவுன் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 299 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.23,520) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இந்த ஸ்மார்ட்போன் சவுதி அரேபியா மற்றும் தாய்லாந்தில் விற்பனை செய்யப்படுகிறது. அதன்பின் ஆசிய, மத்திய கிழக்கு மற்றும் ஆஸ்திரேலியா உள்ள நாடுகளில் விற்பனைக்கு வருகிறது.
    சியோமியின் புதிய ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் மற்றும் 32 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Xiaomi



    சியோமியின் Mi ஏ2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகி எட்டு மாதங்களாகி விட்ட நிலையில், சியோமியின் இரண்டாவது ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது.

    ஆர்சிட் ஸ்பிரவுட் எனும் குறியீட்டு பெயரில் சியோமி ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக எக்ஸ்.டி.ஏ. மூலம் வெளியான தகவல்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் சியோமி இரண்டு ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன்களை உருவாக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இவை பேம்பு ஸ்பிரவுட் மற்றும் காஸ்மோஸ் ஸ்பிரவுட் என இரண்டு ஸ்மார்ட்போன்களுடன் பிக்சிஸ் என்ற பெயரில் உருவாக்கி வருகிறது. இது இரு ஸ்மார்ட்போன்களின் சீன பதிப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. இரு ஸ்மார்ட்போன்களிலும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படும் என தெரிகிறது.


    கோப்பு படம்

    முன்னதாக Mi ஏ1 மற்றும் Mi ஏ2 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களில் பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டிருந்தது. புதிய ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை எடுக்க 32 எம்.பி. செல்ஃபி கேமரா, 4-இன்-1 பிக்சல் பின்னிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் ஏற்கனவே பல்வேறு சியோமி ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட்டிருக்கிறது.

    மற்ற சிறப்பம்சங்களை பொருத்தவரை ஸ்மார்ட்போனின் டாப் எண்ட் மாடல் ஸ்னாப்டிராகன் 6757 பிராசஸர் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் புதிய ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனில் டாட் ரக நாட்ச் வழங்கப்படலாம் என்றும் இதில் AMOLED டிஸ்ப்ளே பேனல் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனத்தின் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் வைபை சான்று பெற்றிருக்கிறது. #Nokia #Smartphone



    சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 விழாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படும் நோக்கியா 3.2 ஸ்மார்ட்போனின் புதிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. நோக்கியா நிறுவனம் TA-1157 என்ற மாடல் நம்பர் கொண்ட புதிய ஸ்மார்ட்போனினை உருவாக்கும் பணிகளில் சமீப காலமாக ஈடுபட்டுள்ளது.

    இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் மாடல் நம்பர் உள்ளிட்டவற்றை வைத்து பார்க்கும் போது நோக்கியா 3.1 மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் நோக்கியா 3.2 என்று அழைக்கப்படலாம் என்றும் தெரிகிறது.

    புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் கூகுளின் ஆண்ட்ராய்டு ஒன் திட்டத்தின் கீழ் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் அமெரிக்காவின் எஃப்.சி.சி. வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகி இருந்தது. அதன்படி நோக்கியா 3.2 ஸ்மார்ட்போனில் டூயல் பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது. இத்துடன் எல்.இ.டி. ஃபிளாஷ் யூனிட் ஒன்றும் வழங்கப்படுகிறது.


    புகைப்படம் நன்றி: SlashLeaks

    தற்சமயம் இந்த ஸ்மார்ட்போன் வைபை அலையன்ஸ் சான்று பெற்றிருக்கிறது. இதில் ஸ்மார்ட்போனின் மேலும் சில விவரங்கள் கிடைத்திருக்கிறது. அதன்படி நோக்கியா 3.2 ஸ்மார்ட்போனில் வைபை 802.11 b/g/n மற்றும் வைபை டைரக்ட் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் பிரீ-இன்ஸ்டால் செய்யப்படுகிறது.

    மற்ற அம்சங்களை பொருத்தவரை நோக்கியா 3.2 ஸ்மார்ட்போனில் 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. மெமரியும், 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி என இருவித வேரியண்ட்களில் அறிமுகமாகிறது. இத்துடன் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்படலாம் என தெரிகிறது. 

    நோக்கியா 3.2 ஸ்மார்ட்போன் 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனுடன் ஹெச்.எம்.டி. குளோபல் நோக்கியா 9 பியூர் வியூ, நோக்கியா 4.2 மற்றும் நோக்கியா 1 பிளஸ் உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களையும் அறிமுகம் செய்யலாம்.
    எல்.ஜி. நிறுவனத்தின் கியூ9 ஒன் ஸ்மார்ட்போன் ராணுவ தர பாதுகாப்புடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #LG #Smartphone



    எல்.ஜி. நிறுவனம் தனது புதிய ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனினை கொரியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போன் கியூ9 ஒன் என அழைக்கப்படுகிறது. இதில் 6.1 இன்ச் QHD பிளஸ் 19.5:9 ஃபுல்விஷன் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 835 சிப்செட், 4 ஜி.பி. ரேம், IP68 தரச்சான்று பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டிருக்கிறது.

    எல்.ஜி. நிறுவனம் சமீபத்தில் தனது கியூ9 ஸ்மார்ட்போனினை கொரியாவில் அறிமுகம் செய்தது. ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போன் ஜி7 ஒன் என்ற பெயரில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஐ.எஃப்.ஏ. விழாவில் அறிமுகமானது. எல்.ஜி. ஜி7 ஒன் ஸ்மார்ட்போனில் பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன் வழங்கப்பட்டுள்ளது.



    எல்.ஜி. கியூ9 ஒன் சிறப்பம்சங்கள்

    - 6.1 இன்ச் 3120x1440 பிக்சல் 19.5:9 ஃபுல் விஷன் சூப்பர் பிரைட் IPS டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 பிராசஸர்
    - அட்ரினோ 540 GPU
    - 4 ஜி.பி. ரேம்
    - 64 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 9.0 பை
    - 16 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.6, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/1.9
    - கைரேகை சென்சார்
    - பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன்
    - வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68)
    - MIL-STD 810G சான்று
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், பூம்பாக்ஸ் ஸ்பீக்கர், எஃப்.எம். ரேடியோ
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
    - 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, க்விக் சார்ஜ் 3.0

    எல்.ஜி. கியூ9 ஒன் ஸ்மார்ட்போன் மொராக்கன் புளு நிறத்தில் கிடைக்கிறது. கொரியாவில் இதன் விலை 599,500 கொரியன் வொன் (இந்திய மதிப்பில் ரூ.37,940) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ×